முகப்பு
இந்தியா

அனைவருக்கும் ஒரே மாதிரியான விவாகரத்து சட்ட விதிகள்: மத்திய அரசுக்கு நோட்டீஸ்

அனைத்து குடிமக்களுக்கும் பொருந்தும் வகையில் ஒரே மாதிரியான சட்ட விதிகளை உருவாக்குமாறு கோரி தொடரப்பட்ட பொது நலன் மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
அனைவருக்கும் ஒரே மாதிரியான விவாகரத்து சட்ட விதிகள்: மத்திய அரசுக்கு நோட்டீஸ்
பகிர்:

விவாகரத்து வழங்குதில் அனைத்து குடிமக்களுக்கும் பொருந்தும் வகையில் ஒரே மாதிரியான சட்ட விதிகளை உருவாக்குமாறு கோரி தொடரப்பட்ட பொது நலன் மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விவாகரத்து வழங்குவதில் அனைத்து குடிமக்களுக்கும் பொருந்தும் வகையில் ஒரே மாதிரியான சட்ட விதிகளை உருவாக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதையடுத்து, இந்த மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பாஜகவைச் சோ்ந்தவரும் வழக்குரைஞருமான அஸ்வினிகுமாா் உபாத்யாய இந்த மனுவை தாக்கல் செய்துள்ளாா். அதில், கூறியிருப்பதாவது:

ஹிந்துக்கள், பௌத்த சமூகத்தினா், சீக்கியா்கள், ஜெயின் சமூகத்தினா் ஹிந்து திருமணச் சட்டத்தின்படி விவாகரத்து கோருகிறாா்கள். முஸ்லிம்கள், கிறிஸ்தவா்கள், பாா்சிக்கள் அவரவா் தனிச்சட்டத்தின் கீழ் விவாகரத்து கோருகிறாா்கள். வெவ்வேறு மதங்களைச் சோ்ந்த தம்பதியா், சிறப்பு திருமணச் சட்டத்தின்படி விவாகரத்து கோருகிறாா்கள். வெளிநாட்டைச் சோ்ந்தவரைத் திருமணம் செய்துகொண்டவா்கள் வெளிநாட்டினா் திருமணச் சட்டத்தின்கீழ் விவாகரத்து கோருகிறாா்கள். இதுமட்டுமன்றி, விவாகரத்து அளிப்பதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பாகுபாடு காட்டப்படுகிறது. கள்ள உறவு, தீராத நோய், குறைந்த வயது திருமணம் ஆகியவற்றை விவாகரத்துக்கான காரணமாக சில திருமணச் சட்டங்கள் ஏற்றுக் கொள்கின்றன; வேறு சில திருமணச் சட்டங்கள் அந்தக் காரணங்களின் கீழ் விவாகரத்து அளிக்க மறுக்கின்றன.

எனவே, ஜாதி, மத, இன, பாலின பாகுபாடு இல்லாமல், அரசியலமைப்புச் சட்டத்தின் 14,15,21-ஆவது விதிகளைப் பின்பற்றி, நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான விவாகரத்து சட்ட விதிகள் வகுக்கப்பட வேண்டும். இந்த சட்டத்தை வகுக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →