கரோனாவிலிருந்து மீண்ட 105 வயது மூதாட்டி
கரோனா தொற்று பாதிப்பிற்கு சிகிச்சைப் பெற்று வந்த புணேவைச் சேர்ந்த 105 வயதான மூதாட்டி தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளார்.
கரோனா தொற்று பாதிப்பிற்கு சிகிச்சைப் பெற்று வந்த புணேவைச் சேர்ந்த 105 வயதான மூதாட்டி தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளார்.
உலகம் முழுவதும் கரோனா தொற்று பாதிப்பால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வயது வித்தியாசமின்றி அனைவரும் கரோனா பாதிப்பால் அவதியுற்றுள்ளனர்.
இந்நிலையில் 105 வயதான மூதாட்டி ஒருவர் கரோனா தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து சாதனை படைத்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் புணேவைச் சேர்ந்தவர் 105 வயதான சாந்தபாய் ஹுல்வாலே. ஹின்ஜேவாடியில் வசிக்கும் இவரது குடும்பத்தினர் அனைவரும் கடந்த 10 நாள்களுக்கு முன்பாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது குடும்பத்தினர் அனைவரும் கரோனா தொற்று பாதிப்பிற்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தனர்.
தொடக்கத்தில் நிமோனியா பாதிப்பால் அவதிப்பட்ட மூதாட்டி சாந்தபாய் தொடர் சிகிச்சையின் மூலமாக தற்போது கரோனா தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளார்.
அவர் தொடர் சிகிச்சைக்கு சிறப்பாக ஒத்துழைப்பு வழங்கியதாகத் தெரிவித்த மருத்துவர்கள் அவர் குணமடைந்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்தனர்.