முகப்பு
இந்தியா

எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் இன்று மீண்டும் அத்துமீறலில் ஈடுபட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் இன்று மீண்டும் அத்துமீறலில் ஈடுபட்டது. 
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் வாடிக்கையாகக் கொண்டுள்ளது. பாகிஸ்தானின் அத்து மீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. 
கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பாகிஸ்தானின் அத்துமீறல் சம்பவங்கள் அதிகரித்து உள்ளன. 
இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாலகோட் செக்டரில் பாகிஸ்தான் ராணுவம் இன்று மீண்டும் அத்துமீறலில் ஈடுபட்டது. 
சிறிய ரக ஆயுதங்கள் மற்றும் மோட்டார் குண்டுகள் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு இந்திய  ராணுவம் தரப்பிலும் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது. இதனால் எல்லையில் பதற்றம் நிலவுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →