முகப்பு
இந்தியா

மும்பையில் 11 மாதத்தில் 928 பேர் தற்கொலை

மும்பையில் நடப்பாண்டு 928 பேர் ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
கோப்புப்படம்
பகிர்:

மும்பையில் நடப்பாண்டு 928 பேர் ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

மும்பை காவல்துறை வெளியிட்ட தரவுகளின் படி வயதானவர்களைக் காட்டிலும் 19-30 வயதுக்குட்பட்டவர்களே அதிகம் தற்கொலைகளில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது.  தற்கொலை செய்து கொண்டவர்களில் 90 பேர் மூத்தக் குடிமக்கள் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

மும்பை நகரத்தில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட காலத்தில் மொத்தம் 371 பேர் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்துள்ள காவல்துறை நடப்பாண்டு 11 மாத காலத்தில் மொத்தம் 928 பேர் தற்கொலையில் ஈடுபட்டதாகத் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 14 சதவிதம் குறைவாகும். கடந்த ஆண்டு 1,075 பேர் தற்கொலையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

கரோனா தொற்று பாதிப்பானால் ஏற்பட்ட வேலையின்மை, நிதிப் பிரச்னைகள், சமூக ஆதரவு இல்லாமை, தனிமை உள்ளிட்ட காரணிகள் இளைஞர்களின் தற்கொலை எண்ணத்திற்கு காரணிகளாக இருந்ததாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →