ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்
ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்ட எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் சனிக்கிழமை அத்துமீறி தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்ட எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் சனிக்கிழமை அத்துமீறி தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
பூஞ்ச் மாவட்டத்தின் கிர்னி மற்றும் மால்டி பகுதிகளில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்தது.
வெள்ளிக்கிழமை, பூஞ்ச் மாவட்டத்தின் மெந்தர் மற்றும் பாலகோட் பகுதிகளில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.