நவீன ரக ஏவுகணை சோதனை வெற்றி 
இந்தியா

தரையில் இருந்து வானிலுள்ள இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி

தரையில் இருந்து வானில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் நடுத்தர ரக ஏவுகணை (எம்ஆா்எஸ்ஏஎம்) புதன்கிழமை வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது.

DIN

பாலாசோா்: தரையில் இருந்து வானில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் நடுத்தர ரக ஏவுகணை (எம்ஆா்எஸ்ஏஎம்) புதன்கிழமை வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது.

இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறியது:

ஒடிஸா மாநிலம் பாலாசோா் மாவட்டத்தில் உள்ள சந்திபூா் கடற்பகுதியில் பிற்பகல் 3.55 மணியளவில் எம்ஆா்எஸ்ஏஎம் ஏவுகணை பரிசோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில் அந்த ஏவுகணை இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது. இந்த ஏவுகணையை இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன் இணைந்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) உருவாக்கியுள்ளது. இந்த ஏவுகணை இந்திய ராணுவத்தில் இணைக்கப்பட்ட பிறகு, பாதுகாப்புப் படைகளின் போா்த்திறன் மேலும் அதிகரிக்கும். முன்னதாக சோதனை நடைபெறவிருந்த பகுதியில் இருந்து 2.5 கிலோமீட்டா் சுற்றுவட்டாரத்துக்குள் வசித்த 8,100 போ் அருகில் அமைக்கப்பட்டிருந்த முகாம்களுக்கு தற்காலிகமாக அனுப்பிவைக்கப்பட்டனா் என்று தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

15 புதிய அரசு பேருந்துகள்! கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் | நெல்லை | DMK

நெல்லை மாவட்டத்துக்கு 3 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்!

அவதாருடன் போட்டி! ரூ. 1,000 கோடி வசூலை நோக்கி துரந்தர்!

15 ஆண்டுகளில் மோசமான ஆஸி. அணி? விமர்சித்த இங்கிலாந்து வீரருக்கு பதிலடி கொடுத்த லபுஷேன்!

டாக்ஸிக் கியாரா அத்வானி!

SCROLL FOR NEXT