இந்தியா

கிறிஸ்துமஸ்: நாடு முழுவதும் கோலாகலக் கொண்டாட்டம்

DIN

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நாடு முழுவதுமுள்ள கிறிஸ்தவ மக்கள் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

உலகம் முழுவதும் இன்று (டிச.25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகின்றது. இயேசு பிறப்பை கொண்டாடும் விதமாக இந்தியாவிலும் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் தேவாலயங்களில் கூடி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

நள்ளிரவு முதலே பெரும்பாலான தேவாலயங்களில் மக்கள் சமூக இடைவெளியுடன் சிறப்புப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். 

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள தேவாலயத்தில் மக்கள் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்தவாறு காலை சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
 
ஒடிசாவில் புவனேஸ்வர் உள்ளிட்ட பகுதிகளில் தேவாலயங்களில் மக்கள் கூடி சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

கேரளத்திலும் திருவனந்தபுரம் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், மகாராஷ்டிரம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களிலும் சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது.

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நாடு முழுவதுமுள்ள தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

SCROLL FOR NEXT