முகப்பு
இந்தியா

தெலங்கானாவில் சாலை விபத்து: 4 பேர் பலி

தெலங்கானாவில் ஆட்டோவிற்கு காத்திருந்தவர்கள் மீது லாரி மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் பெண் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
தெலங்கானாவில் சாலை விபத்து: 4 பேர் பலி (கோப்புப்படம்)
பகிர்:

தெலங்கானாவில் ஆட்டோவிற்கு காத்திருந்தவர்கள் மீது லாரி மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் பெண் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தெலங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டத்திலுள்ள மோமின்பேட்டை பகுதியில் பெண் உள்பட நான்கு பேர் ஆட்டோவில்  ஏறிக்கொண்டிருந்தனர்.  

அப்போது அந்தவழியாக வந்த லாரி ஒன்று ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் ஒரு பெண் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →