மகாராஷ்டிரத்தில் புதிதாக 2,498 பேருக்கு கரோனா
மகாராஷ்டிரத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 2,498 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 2,498 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 2,498 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 19,22,048 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 4,501 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தம் 50 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 18,14,449 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் மொத்தம் 57,159 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சையில் உள்ளனர்.
Advertisement
மகாராஷ்டிரத்தில் குணமடைவோர் விகிதம் 94.4 சதவிகிதமாக உள்ளது.