முகப்பு
இந்தியா

பஞ்சாப்: ரிலையன்ஸ் ஜியோ தொலைத்தொடர்பு கோபுரங்களை தொடர்ந்து சேதப்படுத்தி வரும் விவசாயிகள்

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பஞ்சாபில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துக்குச் சொந்தமான தொலைத்தொடர்பு கோபுரங்களை விவசாயிகள் தொடர்ந்து சேதப்படுத்தி வருகின்றனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
பகிர்:

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பஞ்சாபில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துக்குச் சொந்தமான தொலைத்தொடர்பு கோபுரங்களை விவசாயிகள் தொடர்ந்து சேதப்படுத்தி வருகின்றனர்.
 மத்திய அரசு இயற்றியுள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு பஞ்சாப் விவசாயிகள் இடையே பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது. எனவே தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தும் நோக்கில், அமிருதசரஸ், ஃபிரோஸ்பூர், ஜலந்தர், பதான்கோட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துக்குச் சொந்தமான தொலைத்தொடர்பு கோபுரங்களை விவசாயிகள் சேதப்படுத்தி வருகின்றனர்.
 இதுவரை 1,500-க்கும் மேற்பட்ட தொலைத்தொடர்பு கோபுரங்களை அவர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.
 தொலைத்தொடர்பு கோபுரங்களை சேதப்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாநில முதல்வர் அமரீந்தர் சிங் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளபோதிலும், விவசாயிகள் கோபுரங்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருகின்றனர்.
 அவ்வாறு செவ்வாய்க்கிழமை மட்டும் 63 கோபுரங்கள் சேதப்படுத்தப்பட்டன. விவசாயிகளின் இந்த நடவடிக்கைக்கு இந்திய செல்லுலர் ஆப்பரேட்டர்கள் கூட்டமைப்பு (சிஓஏஐ) கண்டனம் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →