முகப்பு
இந்தியா

பிகார்: 8-வது நாளாக தொடரும் இளநிலை மருத்துவர்கள் போராட்டம்

பிகாரில் இளநிலை மருத்துவர்கள் தொடர்ந்து 8-வது நாளாக பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
பிகார்: 8-வது நாளாக தொடரும் இளநிலை மருத்துவர்கள் போராட்டம் (கோப்புப்படம்)
பகிர்:


பிகாரில் இளநிலை மருத்துவர்கள் தொடர்ந்து 8-வது நாளாக பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

பணிக்கு உரிய படித்தொகையை வழங்க வலியுறுத்தி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் இளநிலை மருத்துவர்கள் கடந்த 23-ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இளநிலை மருத்துவர்களின் போராட்டத்தால் அரசு மருத்துவமனையின் மருத்துவ சேவையில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

ஒரு சில மருத்துவமனைகளில் புற நோயாளிகளும், அவசர சிகிச்சை பெறுவோரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த திங்கள் கிழமை (டிச.28) இளநிலை மருத்துவர்களின் பிரதிநிதிகளுடன், பாட்னா மருத்துவக் கல்லூரி மற்று மருத்துவமனை நிர்வாகிகள்     நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதனைத்தொடர்ந்து இளநிலை மருத்துவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் அம்மாநில அரசு ஈடுபட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →