முகப்பு
இந்தியா

புத்தாண்டு கொண்டாட்டம்: கூட்டம் கூடுவதை தடுக்க தீவிர கண்காணிப்பு அவசியம்: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

புத்தாண்டு கொண்டாட்டங்களால் கரோனா தொற்று அதிகமாக பரவ வாய்ப்பு உள்ளதால், கூட்டம் கூடுவதைத் தடுக்க தீவிர கண்காணிப்பை மாநிலங்கள் அமல்படுத்த வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமச்சகம் 

இந்தியா

புத்தாண்டு கொண்டாட்டம்: கூட்டம் கூடுவதை தடுக்க தீவிர கண்காணிப்பு அவசியம்: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

புத்தாண்டு கொண்டாட்டங்களால் கரோனா தொற்று அதிகமாக பரவ வாய்ப்பு உள்ளதால், கூட்டம் கூடுவதைத் தடுக்க தீவிர கண்காணிப்பை மாநிலங்கள் அமல்படுத்த வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமச்சகம் 

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
பகிர்:


புது தில்லி: புத்தாண்டு கொண்டாட்டங்களால் கரோனா தொற்று அதிகமாக பரவ வாய்ப்பு உள்ளதால், கூட்டம் கூடுவதைத் தடுக்க தீவிர கண்காணிப்பை மாநிலங்கள் அமல்படுத்த வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

பிரிட்டனில் புதிய வகை கரோனா தொற்று பரவி வருகிறது. ஏற்கெனவே உள்ள கரோனா தீநுண்மியைவிட, இந்த உருமாறிய கரோனா வேகமாகப் பரவும் திரணைக் கொண்டுள்ளது. எனவே, அதனை முன்னதாகவே தடுக்க மத்தியி அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக இந்தியா - பிரிட்டன் இடையே விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. மேலும், மாநிலங்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பாக புதிய விதிமுறைகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டது. அதன்படி, பிரிட்டனிலிருந்து கடந்த சில வாரங்களில் இந்தியா வந்த அனைவரையும் கண்டறிந்து, கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா்.

நோய்த் தொற்று தொடா்பான கண்காணிப்பை தீவிரப்படுத்துவதற்கான புதிய வழிகாட்டுதலை மத்திய உள்துறை அமைச்சகம் அண்மையில் வெளியிட்டது. அந்த வழிகாட்டுதலில், ‘நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தொடா்ந்து கவனமுடன் வரையறுக்கப்படுவதோடு, அந்தப் பகுதிகளில் வரையறுக்கப்பட்ட நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட நோய்த் தடுப்பு வழிகாட்டு நடைமுறைகள் 2021-ஆம் ஆண்டு ஜனவரி 31-ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்பட வேண்டும்’ என்று மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டது.

இந்தச் சூழலில், புத்தாண்டு கொண்டாட்டங்களில் கூட்டம் கூடுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை செயலா் ராஜேஷ் பூஷன், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் கரோனா பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவில் விரிவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், தீவிர கண்காணிப்பையும் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

அந்த வகையில், இப்போது வரவுள்ள புத்தாண்டு, அதை சாா்ந்த கொண்டாட்டங்களால் கரோனா தொற்று அதிகமானோருக்கு பரவ வாய்ப்பு உள்ளதால், பொது இடங்களிலும் குறிப்பிட்ட நிகழ்ச்சிகளிலும் அதிக அளவில் கூட்டம் கூடுவதைத் தடுக்க தீவிர கண்காணிப்பை மாநிலங்கள் அமல்படுத்த வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் அவா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

மேலும், மத்திய உள்துறை அமைச்சகம் சாா்பில் மாநிலங்களுக்கு அண்மையில் வழங்கப்பட்ட ஆலோசனை மற்றும் புதிய வழிகாட்டுதளையும் மாநிலங்கள் பின்பற்றுவது அவசியம் என்றும் கடிதத்தில் அவா் மீண்டும் வலியுறுத்தியுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →