வாட்ஸ்ஆப் மூலமாகவே வங்கிச் சேவை: சிட்டி யூனியன் வங்கி அறிமுகம் 
இந்தியா

வாட்ஸ்ஆப் மூலமாகவே வங்கிச் சேவை: சிட்டி யூனியன் வங்கி அறிமுகம்

தமிழகத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் சிட்டி யூனியன் வங்கி, வாட்ஸ்ஆப் செயலி மூலமாகவே தனது வங்கிச் சேவையை அளிக்கும் வாய்ப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

DIN


புது தில்லி: தமிழகத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் சிட்டி யூனியன் வங்கி, வாட்ஸ்ஆப் செயலி மூலமாகவே தனது வங்கிச் சேவையை அளிக்கும் வாய்ப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

வீட்டிலிருந்தபடியே சிட்டி யூனியன் வங்கியில் கணக்குத் தொடங்குவதற்கு ஏதுவாக, காணொலி வாயிலாக வாடிக்கையாளர்களின் விவரங்களை அறிந்து கொள்ளும் வசதியை (கே.ஒய்.சி) வங்கி நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. 

காணொலி வாயிலாக வாடிக்கையாளர்களின் விவரங்களை அறிந்து கொள்வதற்கு அனுமதியளித்த ரிசர்வ் வங்கி, இதற்கான வழிமுறைகளையும் வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில், தற்போது வாட்ஸ்ஆப் வங்கிச்சேவையை தனது பயனாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது சிட்டி யூனியன் வங்கி.

அதாவது, சிட்டி யூனியன் வங்கியின் வாடிக்கையாளர் தகவல் எண்ணான 044-71225000 என்ற வாட்ஸ்ஆப் எண்ணுக்கு, வங்கிச் சேவையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், வங்கியுடன் இணைக்கப்பட்ட செல்லிடப்பேசி எண்ணிலிருந்து எச்ஐ (ஹாய்) என்று அனுப்பி பதிவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே.. தலைப்புச் செய்தியானவர்கள்..

இந்த வாட்ஸ்ஆப் எண்ணிலிருந்தே உடனடியாக வங்கிக் கணக்குத் தொடங்குதல், வங்கிக் கணக்கில் இருக்கும் தொகையை அறிதல், நிரந்தர வைப்புக் கணக்குத் தொடங்குதல், சிறு தகவல் அறிக்கை, பின் எண்களை மாற்றுதல், கிரெடிட், டெபிட் அட்டைகளை பிளாக் செய்தல் போன்ற வங்கிச் சேவைகளைப் பெறலாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்கு வங்கியை அதிகரிக்க பாஜக தில்லுமுல்லு: அமைச்சா் துரைமுருகன்

இசையே முக்கியம்...

விவசாயம் சார்ந்த கதை

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.20.70 லட்சம் மோசடி

பேல் பூரி

SCROLL FOR NEXT