முகப்பு
ராஜஸ்தான்-ஹரியாணா எல்லையில் விவசாயிகள், காவலர்கள் இடையே மோதல் (கோப்புப்படம்)
இந்தியா

ராஜஸ்தான்-ஹரியாணா எல்லையில் விவசாயிகள், காவலர்கள் இடையே மோதல்

ராஜஸ்தான் - ஹரியாணா எல்லையிலிருந்து தில்லியில் நுழைய முயன்ற விவசாயிகளை காவல்துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்தும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் கலைத்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
ராஜஸ்தான்-ஹரியாணா எல்லையில் விவசாயிகள், காவலர்கள் இடையே மோதல் (கோப்புப்படம்)
பகிர்:

ராஜஸ்தான் - ஹரியாணா எல்லையிலிருந்து தில்லியில் நுழைய முயன்ற விவசாயிகளை காவல்துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்தும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் கலைத்தனர்.

ஹரியாணா எல்லையில் காவல்துறையினர் அமைத்திருந்த தடுப்புகளை விவசாயிகள் டிராக்டர்கள் மூலம் தகர்த்து தில்லி எல்லையில் நுழைய முயன்றனர். 

இதேபோன்று ராஜஸ்தான் மாநிலம் ஷாஜகான்பூர் - ரிவாரி எல்லையிலும் தில்லி நோக்கி விவசாயிகள் நுழைய முயன்றனர்.

காவல்துறையினரின் தடுப்புகளை தகர்த்து தில்லியினுள் நுழைய முயன்றதால் காவல்துறையினர் விவசாயிகளைத் தடுக்கும் வகையில் கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும், தண்ணீரையும் பீய்ச்சியடித்து கலைத்தனர்.

இது குறித்து பேசிய கிஷான் பஞ்சாயத்து தலைவர் ராம்பால் ஜாத், விவசாயிகள் போராட்டம் அமைதியான முறையில் நடைபெற்று வரும் நிலையில், சிலர் இவ்வாறு செய்வது அதிருப்தியளிக்கிறது. வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்று விவசாயிகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. அவர்களுடன் பேசுவதற்கு குழுவில் இருந்து சிலரை அனுப்பி வைத்துள்ளோம் என்று கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →