முகப்பு
இந்தியா

நிர்பயா வழக்கு குற்றவாளி அக்ஷய் குமாரின் கருணை மனு நிராகரிப்பு

நிர்பயா வழக்கு குற்றவாளிகளுள் ஒருவரான அக்ஷய் குமாரின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று (புதன்கிழமை) நிராகரித்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:44 PM
பகிர்:


நிர்பயா வழக்கு குற்றவாளிகளுள் ஒருவரான அக்ஷய் குமாரின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று (புதன்கிழமை) நிராகரித்தார்.

நிர்பயா வழக்கு தூக்குத் தண்டனை குற்றவாளிகளுள் ஒருவரான அக்ஷய் குமார் கடந்த 1-ஆம் தேதி குடியரசுத் தலைவரிடம் கருணை மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், அவரது கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார்.

ஏற்கெனவே, இந்த வழக்கின் மற்ற இரண்டு தூக்குத் தண்டனை குற்றவாளிகளான முகேஷ் சிங் மற்றும் வினய் குமார் சர்மா ஆகியோரது கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.