முகப்பு
இந்தியா

வேலைவாய்ப்பின்மையை சுட்டிக்காட்டி பக்கோடா சுட்ட மேற்கு வங்க காங்கிரஸ்

வேலைவாய்ப்பின்மையை விமர்சிக்கும் விதமாக மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் பக்கோடா சுடும் போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:48 PM
பகிர்:

வேலைவாய்ப்பின்மையை விமர்சிக்கும் விதமாக மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் பக்கோடா சுடும் போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர்.

நாட்டில் கடந்த 45 ஆண்டுகளாக இல்லாத அளவில் வேலைவாய்ப்பின்மை அதிகளவில் நிலவுவதாக குற்றம்சாட்டி மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் பக்கோடா சுடும் போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர். அப்போது பட்டம் உள்ளது வேலை இல்லை, 45 ஆண்டுகளில் இல்லாத அளவு வேலைவாய்ப்பின்மை போன்ற கோஷங்கள் அடங்கிய பதாகைகளையும் வைத்திருந்தனர்.

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசை வேலைவாய்ப்பின்மை மற்றும் பொருளாதாரப் பின்னடைவு உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி பல்வேறு தரப்பு போராட்டங்களில் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டு வருகிறது. 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments