கோப்புப்டம் 
இந்தியா

தாஜ்மஹாலுக்கு தனியாகத்தான் போகிறார் டிரம்ப்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா டிரம்ப்பின் தாஜ்மஹால் பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடன் செல்ல மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

DIN


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா டிரம்ப்பின் தாஜ்மஹால் பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடன் செல்ல மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அவரது மனைவி மெலானியா டிரம்ப் ஆகியோர் பிப்ரவரி 24, 25 ஆகிய தேதிகளில் அரசுமுறைப் பயணமாக இந்தியா வரவுள்ளனர். இந்தப் பயணத்தின்போது அவர்கள் தில்லி மற்றும் ஆமதாபாத்துக்குச் செல்லவுள்ளனர். இந்தப் பயணத்தின் முதல் நாளிலேயே டொனால்ட் டிரம்ப் மற்றும் மெலானியா டிரம்ப் ஆகியோர் தாஜ்மஹாலுக்குச் செல்கின்றனர். இவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடியும் உடன் செல்வதாகத் தகவல்கள் வெளியானது.

ஆனால், தாஜ்மஹால் பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடன் செல்லவில்லை என அரசுத் தரப்பு வட்டாரங்கள் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முற்றுகையில் ஈடுபட்ட 135 போ் மீது வழக்கு

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆா்ப்பாட்டம்

தீபாவளி: விவசாயத் தொழிலாளா்களுக்கு ரூ.5,000 உதவித் தொகை வழங்கக் கோரிக்கை

இந்தியா - வங்கதேசம் இன்று மோதல்

வாக்குத் திருட்டுக்கு எதிராக காங்கிரஸ் கையொப்ப இயக்கம்

SCROLL FOR NEXT