ப.சிதம்பரம் 
இந்தியா

சிஏஏ தெடர்பான எங்கள் எச்சரிக்கை செவிடான காதுகளில்தான் சென்று சேர்ந்தது: சிதம்பரம் வேதனை

சிஏஏ தெடர்பான எங்கள் எச்சரிக்கை செவிடான காதுகளில்தான் சென்று சேர்ந்தது என்று முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் வேதனை தெரிவித்துள்ளார்.

IANS

புது தில்லி: சிஏஏ தெடர்பான எங்கள் எச்சரிக்கை செவிடான காதுகளில்தான் சென்று சேர்ந்தது என்று முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் வேதனை தெரிவித்துள்ளார்.

தில்லியில் குடியுரிமை திருத்தச் சட்ட (சிஏஏ) ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே திங்கள் மாலை ஏற்பட்ட மோதல் வன்முறையாகியதில், போலீஸ் தலைமைக் காவலர் ஒருவர் உள்பட 9 பேர் இதுவரை  உயிரிழந்துள்ளனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.  நிலமையைக் கட்டுக்குள் கொண்டு வர தில்லி காவல்துறை போராடி வருகிறது.

இந்நிலையில் சிஏஏ தெடர்பான எங்கள் எச்சரிக்கை செவிடான காதுகளில்தான் சென்று சேர்ந்தது என்று முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் வேதனை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:

குடியுரிமை திருத்தச் சட்டம் மக்களை வெகுவாக பிளவுபடுத்தக் கூடியது என்றும், அதனை உடனே நீக்க வேண்டும் அல்லது கைவிட வேண்டும் என்று நாங்கள் (காங்கிரஸ்)  எச்சரித்திருந்தோம். ஆனால்  அது செவிடான காதுகளில்தான் சென்று சேர்ந்தது. உணர்ச்சியற்ற, தொலைநோக்கு பார்வையில்லாத தலைவர்களை ஆட்சியில் அமர்த்தியதன் பலனை மக்கள் இப்போது அனுபவிக்கிறார்கள்.

இப்போதும் காலம் ஒன்றும் கடந்து விடவில்லை. அரசு சிஏஏ எதிர்ப்பாளர்களின் குரலை செவிமெடுக்க வேண்டும். இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் இறுதியாகத் தீர்ப்பு வழங்கும் வரை சட்டத்தை செயல்படாமல் வைக்க வேண்டும்.

இந்தியாவில் குடியுரிமைச் சட்டமானது 1965-ஆம் ஆண்டு முதல் எந்த விதமான திருத்தமும் இன்றி நடைமுறையில் இருந்து வருகிறது. இப்போது மட்டும் ஏன் திருத்தம் தேவைப்படுகிறது? இந்த திருத்தச் சட்டமானது உடனடியாக கைவிடப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லை வந்தே பாரத் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்லும்!

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

SCROLL FOR NEXT