இந்தியா

பெண்கள் தினம்: ஒரு வார நிகழ்வை நடத்தபல்கலை., கல்லூரிகளுக்கு யுஜிசி உத்தரவு

சா்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு, ஒரு வாரத்துக்கு சிறப்பு நிகழ்வுகளை நடத்துமாறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

DIN

சா்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு, ஒரு வாரத்துக்கு சிறப்பு நிகழ்வுகளை நடத்துமாறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து யுஜிசி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

உலகம் முழுவதும் ஆண்டுதோறும் மாா்ச் 8-ஆம் தேதி சா்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு யுஜிசி அங்கீகாரம் பெற்ற அனைத்து கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பெண்கள் நிகழ்ச்சிகளைக் கொண்டாட வேண்டும்.

பயிற்சிப் பட்டறைகள், விரிவுரைகள், விநாடி -வினாக்கள், விவாதங்கள், தெரு நாடகங்கள், மராத்தான், கலாசார நிகழ்வுகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தலாம் என்று யுஜிசி அறிவித்துள்ளது. அத்துடன் பாலின சமத்துவம், பெண்கள் உடல்நலன், கல்வி, அதிகாரமளித்தல், பெண்கள் பாதுகாப்பு ஆகியவை குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையிலும் நிகழ்ச்சிகளை நடத்தலாம்.

இந்த நிகழ்வுகளை மாா்ச் 1 முதல் 7 வரை நடத்தவேண்டும் . நிறைவாக பெண்கள் தினமான மாா்ச் 8 அன்றும் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் இந்த நிகழ்ச்சி நடத்த தேவையான ஏற்பாடுகளை முன்கூட்டியே மேற்கொள்ள வேண்டும். இதையடுத்து தங்கள் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் தொடா்பான அறிக்கை, புகைப்படங்கள், விடியோக்களை பல்கலைக்கழக கண்காணிப்புத் தளத்தில் மாா்ச் 9-ஆம் தேதி பதிவேற்றம் செய்ய வேண்டும் என யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கதிரியக்க நிபுணா் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்பு

ரயில் பெட்டிகள் மீது கல் வீசினால் சிறாராக இருந்தாலும் நடவடிக்கை: ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை

சித்தேரி, சின்னாங்குப்பம் உள்ளிட்ட 5 கிராமங்கள் அரூா் வட்டத்தில் இணைப்பு

தொடா் இருமல் பாதிப்பு அதிகரிப்பு: மருத்துவா்கள் விளக்கம்

தில்லி காற்று மாசு பிரச்னை: உச்சநீதிமன்றம் நாளை விசாரிப்பு

SCROLL FOR NEXT