முகப்பு
இந்தியா

ஜார்க்கண்டில் வி.ஹெச்.பி. நடத்திய போராட்டத்தில் வன்முறை; 144 தடை உத்தரவு பிறப்பிப்பு

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தினை எதிர்த்து விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:35 PM
பகிர்:

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தினை எதிர்த்து விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஜார்க்கண்ட் லோகர்தாகா நகரில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை எதிர்த்து விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு நேற்று போராட்டம் நடத்தியது. அப்போது போராட்டத்தில் மர்ம நபர்கள் சிலர் கல்வீச்சு நடத்தியதால் வன்முறை வெடித்தது. உடனடியாக போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வன்முறையை கட்டுப்படுத்தியுள்ளனர். இந்த வன்முறையில் சிலர் காயமடைந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக லோகர்தாகா பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இரு தினங்களுக்கு அப்பகுதியைச் சுற்றியுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. நிலைமை சீரடைந்த பின்னரே 144 தடை உத்தரவு ரத்து செய்யப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →