ஏர்டெல் பயனர்களுக்கு ஜிமெயில் உள்ளிட்ட கூகுள் சேவையில் பாதிப்பு
ஜிமெயில், பிளே ஸ்டோர், கூகுள் கிளவுட், மீட் மற்றும் கூகுள் டிரைவ் உள்ளிட்ட கூகுள் சேவைகளில் பல சிக்கல்கள் எழுந்துள்ளன.
ஜிமெயில், பிளே ஸ்டோர், கூகுள் கிளவுட், மீட் மற்றும் கூகுள் டிரைவ் உள்ளிட்ட கூகுள் சேவைகளில் பல சிக்கல்கள் எழுந்துள்ளன. கூகுள் மின்னஞ்சலான ஜி-மெயிலில் ஆவணங்களை பதிவிறக்கம் செய்ய, மின்னஞ்சல் அனுப்ப முடியவில்லை என கூகுள் பயனர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்தியா முழுவதும் ஏர்டெல் பிராட்பேண்ட் மற்றும் ஏர்டெல் மொபைல் நெட்வொர்க்கைப் பயன்படுத்தும் பயனர்களே இந்த பிரச்னைக்கு ஆளாவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பிரச்னையை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாக கூகுள் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
ஜிமெயிலில் இதுபோன்று பலமுறை பிரச்னை ஏற்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு, விண்டோஸ் 10 ஓஎஸ்-இல் உள்ள மெயில் பயன்பாட்டில் பல பிரச்னைகள் இருந்ததாக பயனர்கள் புகார் அளித்துள்ளனர். அதேபோன்று விண்டோஸ் மற்றும் மேக் கணினிகளில் அவுட்லுக் பயன்பாட்டில் பல பயனர்கள் சிக்கல்களை எதிர்கொண்டனர்.