முகப்பு
இந்தியா

சிஸ்டம் சரியில்லை: குஜராத் அமைச்சரின் மகனை கைது செய்த பெண் காவலர் ராஜினாமா

குஜராத் மாநிலம் சூரத்தில் பொது முடக்க விதிகளை மீறியதாக அமைச்சரின் மகனை கைது செய்த காவல்துறை பெண் காவலர் சுனிதா யாதவ் ராஜினாமா செய்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:57 PM
சிஸ்டம் சரியில்லை: குஜராத்அமைச்சரின் மகனை கைது செய்த பெண் காவலர் ராஜினாமா
பகிர்:


சூரத்: குஜராத் மாநிலம் சூரத்தில் பொது முடக்க விதிகளை மீறியதாக அமைச்சரின் மகனை கைது செய்த காவல்துறை பெண் காவலர் சுனிதா யாதவ் ராஜினாமா செய்துள்ளார்.

இந்த தகவலை காவல்துறை மூத்த அதிகாரிகள் இதுவரை மறுக்கவில்லை.

பிரகாஷ் கனானி, குஜராத் மாநில நல்வாழ்வுத் துறை இணை அமைச்சர் குமார் கனானியின் மகன். இவரும், இவரது இரண்டு நண்பர்களும் கடந்த ஞாயிறன்று சூரத்தில் பிறப்பிக்கப்பட்டிருக்கும் பொது முடக்க விதிகளை மீறியக் குற்றத்துக்காக கைது செய்யப்பட்டனர்.

ஒரு அமைச்சரின் மகனையே விதிமீறல் குற்றத்துக்காகக் கைது செய்த சுனிதா யாதவை சமூக ஊடகங்கள் கொண்டாடி வந்த நிலையில், அவர் தனது பணியை ராஜினாமா செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனக்கு எனது மூத்த அதிகாரிகளிடம் இருந்து எந்த ஆதரவும் கிடைக்காததால், நான் எனது பணியை ராஜினாமா செய்கிறேன். நான் ஒரு காவலராக எனது பணியைத்தான் செய்தேன். இது நமது அமைப்பின் மீதான தவறு, ஒரு அமைச்சரின் மகன் என்றால், அவர்கள் தங்களை மிக மிக முக்கிய நபர்கள் என்று கருதிக் கொள்கிறார்கள் என்று சுனிதா யாதவ் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், அவரது ராஜினாமாவை சூரத் காவல்துறை ஆணையர் ஆர்.பி. பிரஹ்ம்பத் மறுத்துள்ளார், அவர் ராஜினாமா செய்யவில்லை, விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது, இந்த நிலையில் அவர் ராஜினாமா செய்ய முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

சுனிதா யாதவ், அமைச்சரின் மகன் பொதுமுடக்க விதிகளை மீறி வந்தக் குற்றத்துக்காக கைது செய்யும் போது இரு தரப்புக்கும் ஏற்பட்ட மோதல் குறித்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து இந்த சம்பவம் வெளி உலகத்துக்குத் தெரிந்தது. மூன்று பேரும் பிறகு பெயிலில் விடுதலை செய்யப்பட்டனர்.

சுனிதா யாதவுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பரவலாக கருத்துகளும் பகிரப்பட்டது. பெண் சிங்கம் என்றும் சிலர் கருத்துத் தெரிவித்திருந்தனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →