முகப்பு
இந்தியா

ராமர் கோவிலுக்கும், ஜம்மு-காஷ்மீருக்கும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரலாற்று தினமாக இருக்கும்: பாஜக பொதுச் செயலாளர்

ராமர் கோவிலுக்கும், ஜம்மு-காஷ்மீருக்கும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி என்பது வரலாற்று தினமாக இருக்கும் என பாஜக பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:58 PM
பாஜக பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா
பகிர்:

ராமர் கோவிலுக்கும், ஜம்மு-காஷ்மீருக்கும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி என்பது வரலாற்று தினமாக இருக்கும் என பாஜக பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'ஆகஸ்ட் 5 - இது ஒரு வரலாற்று நாள். ஆகஸ்ட் 5, 2019 - ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. ஆகஸ்ட் 5, 2020 - ராமர் கோவில் பூமி பூஜை செய்யப்படவுள்ள நாள்' என்று பதிவிட்டுள்ளார். 

முன்னதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி, ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் விதி 370, 35ஏ ஆகியவை நீக்கப்படுவதற்கான மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். தொடர் விவாதங்களுக்குப் பிறகு இந்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. மேலும், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமானது ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதாவும் நிறைவேற்றப்பட்டது.

அதேபோன்று வருகிற ஆகஸ்ட் 5-ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்ட உள்ளது. இதில், பிரதமர் மோடி கலந்துகொள்வார் என்றும் ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் தலைவர் மகாந்த் நிருத்யா கோபால் தாஸ் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →