முகப்பு
இந்தியா

ஜம்மு - காஷ்மீரில் கார் ஆற்றில் கவிழ்ந்ததில் ஒருவர் பலி; 4 பேர் மாயம்

ஜம்மு காஷ்மீரில் கார் ஆற்றில் கவிழ்ந்ததில் ஒருவர் பலியானார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:59 PM
பகிர்:

ஜம்மு - காஷ்மீரில் கார் ஆற்றில் கவிழ்ந்ததில் ஒருவர் பலியானார். 

ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த மோகன் லால் என்பவர் தனது குடும்பத்துடன் செவ்வாய்கிழமை காரில் செனானியை நோக்கி சென்றிருக்கிறார். ஆனால் அவரது தொலைபேசியை இரவு 8.45 மணிக்கு மேல் தொடர்புகொள்ள முடியவில்லை. இதுதொடர்பாக அவர்களது குடும்பத்தினர் ராம் நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். 

இதனிடையே ககோட் நுல்லா அருகே ஆற்றில் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டதாக உள்ளூர்வாசிகள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து அங்கு விரைந்த காவல்துறையினர் மாயமான 4 பேரைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் பலத்த மழை காரணமாக ஆற்றில் 20 அடிக்கு மேல் நீரோட்டம் இருந்ததால் தேடும் பணியில் கடினம் ஏற்பட்டுள்ளதாக ராம் நகர் காவல் நிலைய அதிகாரி பரத்வாஜ் தெரிவித்துள்ளார். 

எனினும் அவர்களது கார் மீட்கப்பட்டுள்ளது என்றும் தொடர்ந்து தேடும் பணி நடைபெற்று வருகிறது என்றும் அவர் கூறினார். 
 

முழு கட்டுரையைப் படிக்க →