முகப்பு
இந்தியா

ஆற்றின் நடுவே செல்பி எடுக்கச் சென்றபோது வெள்ளத்தில் சிக்கிய பெண்கள்: வைரல் விடியோ

மத்தியப் பிரதேசத்தில் செல்பி எடுக்கச் சென்ற பெண்கள் ஆற்றின் நடுவே சிக்கியது தொடர்பான விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 

Updated On : 24 ஜூலை, 2020 at 4:11 PM
ஆற்றின் நடுவே வெள்ளத்தில் சிக்கிய பெண்கள்
பகிர்:

மத்தியப் பிரதேசத்தில் செல்பி எடுக்கச் சென்ற பெண்கள் ஆற்றின் நடுவே சிக்கியது தொடர்பான விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 

மத்தியப் பிரதேசம் மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் உள்ள ஆற்றின் நடுவே பெண்கள் இருவர் செல்பி எடுப்பதற்காகச் சென்றுள்ளனர். மேலும் தண்ணீர் பாய்ந்து ஓடுவதையும் அவர்கள் விடியோ எடுக்கச் சென்றதாக கூறப்படுகிறது. 

அப்போது சிறிது நேரத்தில் நீரின் வேகம் அதிகரித்ததை அவர்கள் கவனிக்கவில்லை. அவர்கள் ஆற்றின் நடுவே உள்ள ஒரு பாறையின் மீது நின்றபடி, கரைக்கு வரமுடியாமல் தவித்தனர். பின்னர் காப்பாற்றும்படி கூச்சலிட்டுள்ளனர். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததன் பேரில், அவர்கள் வந்து கயிறு மூலமாக போராடி இரு பெண்களையும் காப்பாற்றியுள்ளனர். 

Advertisement

சுமார் இரு மணி நேரம் போராடி பெண்களை மீட்டதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.