பேரவையைக் கூட்ட வேண்டும்: ராஜஸ்தான் ஆளுநர் மாளிகையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் போராட்டம்
ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தி ஆளுநர் மாளிகையில் முதல்வர் அசோக் கெலாட்டின் ஆதரவு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தி ஆளுநர் மாளிகையில் முதல்வர் அசோக் கெலாட்டின் ஆதரவு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராஜஸ்தான் சட்டப்பேரவையைக் கூட்டுவதற்கு வேண்டும் என்றே ஆளுநர் தாமதம் செய்வதாகவும், அவருக்கு மத்திய அரசின் தரப்பில் இருந்து அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும் காங்கிரஸ் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
இந்த நிலையில், ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் ஆளுநர் கல்ராஜ் மிஷ்ராவை இன்று பிற்பகலில் சந்தித்துப் பேசினார்.
இந்த தகவல் கிடைத்ததும் அசோக் கெலாட்டின் ஆதரவு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆளுநர் மாளிகையில் குவிந்தனர். இவர்கள் மாளிகை வளாகத்தில் உள்ள புல்தரையில் அமர்ந்து சட்டப்பேரவையைக் கூட்ட வலியுறுத்தி கோஷம் எழுப்பி வருகின்றனர்.