இந்தியா

லடாக் விவகாரம்: பேச்சுவார்த்தைக்கு வருமாறு இந்தியாவுக்கு சீனா அழைப்பு

லடாக் பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தைக்கு வருமாறு இந்தியாவுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது. 

DIN

லடாக் பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தைக்கு வருமாறு இந்தியாவுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது. 

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் திங்கள்கிழமை இரவு இந்திய-சீனப் படைகள் இடையே ஏற்பட்ட கடும் மோதலில் இந்திய ராணுவத்தின் கர்னல் உள்பட ராணுவத்தினர் 20 பேர் வீர மரணம் அடைந்துள்ளனர். சீனத் தரப்பிலும் 35 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. 

தொடர்ந்து எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில், பேச்சுவார்த்தை மூலமாக லடாக் விவாகரத்தை முடிவுக்கு கொண்டுவரலாம் என இந்தியாவுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது. 

எல்லைப் பிரச்னைக்காக இந்தியாவுடன் மேலும் சண்டையிட விரும்பில்லை என்றும் பிரச்னையை பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ஜாவோ லிஜியான் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். 

முன்னதாக,  முப்படைத் தளபதிகளுடனான ஆலோசனைக்குப் பின்னர் , எல்லையில் பாதுகாப்பை அதிகரிக்கும்படி  அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டதை அடுத்து  சீனா இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இபிஎஸ் கனவு பலிக்காது, மீண்டும் முதல்வராக ஸ்டாலின் பதவியேற்பார்: அமைச்சர் கே.என். நேரு

ஃபஹத் ஃபாசிலின் ஓடும் குதிர சாடும் குதிர டிரைலர்!

மாநகரம் - கூலி உறங்கா இரவுகள்... கலை இயக்குநர் பற்றி லோகேஷ் பெருமிதம்!

பெங்களூரில் மஞ்சள் தடத்தில் மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் இன்று திறந்து வைக்கிறார்!

“வீட்டுக்கு போய் நா கால்ல விழணும்” அஜித் குமார் - ஷாலினி தம்பதியின் Cute விடியோ

SCROLL FOR NEXT