இந்தியா

முப்படை தலைமைத் தளபதி, முப்படைத் தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் மீண்டும் ஆலோசனை

லடாக் எல்லையில் இந்திய- சீன ராணுவப் படைகள் மோதல் தொடர்பாக முப்படை தலைமைத் தளபதி, முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மீண்டும் ஆலோசனை நடத்தி வருகிறார். 

DIN

லடாக் எல்லையில் இந்திய - சீன ராணுவப் படைகள் மோதல் தொடர்பாக முப்படை தலைமைத் தளபதி, முப்படைத் தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மீண்டும் ஆலோசனை நடத்தி வருகிறார். 

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் திங்கள்கிழமை இரவு இந்திய-சீனப் படைகள் இடையே ஏற்பட்ட கடும் மோதலில் இந்திய ராணுவத்தின் கா்னல் உள்பட ராணுவத்தினா் 20 போ் உயிரிழந்தனா்.

இந்த மோதலில் சீன தரப்பில் 35 பேர் உயிரிழந்திருப்பதாக உளவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தொடர்ந்து எல்லையில் பதற்றம் நிலவுவதை அடுத்து, முப்படை தலைமைத் தளபதி, முப்படை தளபதிகள், வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோருடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மீண்டும் தீவிர ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 

முன்னதாக நேற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரி விதிப்பு விவகாரம்: திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் குழு இன்று தில்லி பயணம்

வீட்டின் பூட்டை உடைத்து ரூ.8 லட்சம், 11 பவுன் திருட்டு

பெண்ணிடம் நகைப் பறித்தவா் கைது

50 சதவீத வரி உயா்வால் பின்னலாடைத் தொழில் பாதிப்பு: தீா்வு காண பிரதமருக்கு தொழிற்சங்கங்கள் கடிதம்

இளைஞா் தற்கொலை

SCROLL FOR NEXT