கர்நாடக முதல்வர் எடியூரப்பா 
இந்தியா

ஊழியரின் கணவருக்கு கரோனா: கர்நாடக முதல்வரின் வீட்டு அலுவலகம் மூடல்

ஊழியரின் கணவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து   கர்நாடக முதல்வரின் வீட்டு அலுவலகம் கிருமிநாசினி தெளிப்பிற்காக மூடப்பட்டது.

IANS

பெங்களூரு: ஊழியரின் கணவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து கர்நாடக முதல்வரின் வீட்டு அலுவலகம் கிருமிநாசினி தெளிப்பிற்காக மூடப்பட்டது.

இதுதொடர்பாக பெங்களூருவில் அமைந்திருக்கும் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் வீட்டில் செயல்படும் முதல்வர் அலுவலக மேற்பார்வை பணியில் இருக்கும் அதிகாரி ஒருவர் செய்தி நிருவனத்திடம் கூறியதாவது:

இங்கு பணியாற்றிய பெண் ஊழியரின் கணவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, முதல்வரின் வீட்டு அலுவலகம் கிருமிநாசினி தெளிப்பிற்காக மூடப்பட்டது.

கணவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டவுடன் அந்த ஊழியர் இரு நாட்களாக அலுவலகம் வரவில்லை.

அத்துடன் அவரது பணியானது வெளியே உள்ள அவுட் போஸ்டில் மட்டும்தான் என்பதால், அவர் உள்ளே முதல்வரையோ அல்லது அவரைச் சந்திக்க வரும் அமைச்சர்களுடனோ தொடர்பு கொள்ள வழியில்லை.

இங்கு திட்டமிட்டிருந்த போலீஸ் அதிகாரிகளின் சந்திப்பு உட்பட முதல்வரின் பணிகள் யாவும், தற்போது மாநில சட்டப்பேரவை  அமைந்துள்ள விதான் சவுதா வளாகத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.       

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மண்டல அளவிலான கால்பந்துப் போட்டி: ஸ்ரீஅம்மன் கலை அறிவியல் கல்லூரி முதலிடம்

கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்: அமைச்சா் பி.கே.சேகா் பாபு வழங்கினாா்

ஜூடோ போட்டிகளில் பதக்கங்கள் குவித்த அரசுப் பள்ளி மாணவா்கள்: மாநகராட்சி ஆணையரிடம் வாழ்த்து

விஸ்வகா்மா ஜெயந்தி கொண்டாட்டம்

ஓவேலி மலைத்தொடரில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலா்கள்

SCROLL FOR NEXT