இந்தியா

இமாச்சலில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக யாருக்கும் தொற்று இல்லை

DIN

இமாச்சலில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக யாருக்கும் தொற்று இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 5ஆம் கட்ட பொது முடக்கம் அமலில் உள்ளது. எனினும் நாட்டில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில தினங்களாக தொடர்ந்து 10 ஆயிரத்தைத் தாண்டி வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரசால் புதிதாக 13,586 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதையடுத்து வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 80 ஆயிரத்து 532 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இமாச்சலில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக யாருக்கும் தொற்று இல்லை என அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அங்கு இதுவரை 595 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் 200 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். 376 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். மேலும் கரோனாவுக்கு இதுவரை 6 பேர் பலியாகியுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT