இந்தியா

திருப்பதியில் கூடுதலாக மூவாயிரம் பக்தர்களுக்கு அனுமதி

DIN

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கூடுதலாக மூவாயிரம் உள்பட நாளொன்றுக்கு ஒன்பதாயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தேவஸ்தானம் அனுமதி வழங்கியுள்ளது. 

கரோனா பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த ஜூன் 8-ம் தேதி முதல் உள்ளூர் மக்கள் மற்றும் ஊழியர்கள் தரிசனம் செய்த அனுமதித்தது. 

இதையடுத்து, ஜூன் 11 முதல் பொதுமக்கள் ஏழுமலையான் தரிசனத்துக்கு அனுமதி வழங்கியது. நாளொன்றுக்கு 6,750 பேர் என்ற நிலையில், 3 ஆயிரம் பக்தர்கள் ரூ.300 சிறப்பு தரிசனத்திலும், 3 ஆயிரம் பக்தர்கள் இலவச தரிசனமும் செய்து வந்தனர். மேலும், விஐபி தரிசனத்தில் 750 பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். 

இந்நிலையில், எழுமலையான் தரிசனத்தை அதிகரிக்கக்கோரி பக்தர்கள் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், ஆன்லைன் மூலம் மேலும் மூவாயிரம் டிக்கெட்டுகள் பக்தர்கள் பதிவு செய்துகொள்ளலாம். இதன்மூலம் நாளொன்றுக்கு 9,750 பக்தர்கள் ஏழுமலையானைத் தரிசனம் செய்யலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ மை ரித்திகா!

பதவியை தக்கவைக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்: கார்கே

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 93 தொகுதிகள் யார் பக்கம்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 15 வரை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT