முகப்பு
இந்தியா

ராஜஸ்தானில் இளைஞரும், சகோதரரின் விதவை மனைவியும் தற்கொலை

ராஜஸ்தான் மாநிலம் தௌஸா மாவட்டத்தில் இளைஞரும், அவரது சகோதரரின் விதவை மனைவியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:49 PM
சேர்ந்து வாழ முடியாததால் இருவர் தற்கொலை
பகிர்:


ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலம் தௌஸா மாவட்டத்தில் இளைஞரும், அவரது சகோதரரின் விதவை மனைவியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

ஹர்கேஷ் (22), அவரது சகோதரர் மனைவி கன்னா (25) இருவரும் நேற்று இரவு அவர்களது வீட்டில் தனித்தனி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், இளைஞரும், சகோதரரின் விதவை மனைவியும் திருமணம் செய்து கொள்ள விரும்பியதாகவும், ஆனால் அதற்கு குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த முடிவுக்கு வந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

கன்னா, சில ஆண்டுகளுக்கு முன்பு ஹர்கேஷின் சகோதரரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், ஹர்கேஷின் சகோதரர் மரணம் அடைந்து விட்டார். அவர்களுக்கு ஒரு குழந்தை இருக்கும் நிலையில், கன்னாவும், ஹர்கேஷும் சேர்ந்து வாழ விரும்பினர். ஆனால், அதற்கு குடும்பத்தார் ஒப்புக் கொள்ளவில்லை.

இதனால் இருவரும் இந்த துயர முடிவை எடுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
 

முழு கட்டுரையைப் படிக்க →