பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது
தில்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தில்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஸ்ம்ரிதி இரானி, ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
கரோனா தடுப்பு நிவாரண நிதி, ராணுவத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட முக்கிய முடிவுகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், கூட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள், சீன எல்லைப் பிரச்னை குறித்தும் பேசப்படும் என்றும் தெரிகிறது.