முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் நிலநடுக்கம்

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தின் ஜம்மு பகுதியில் செவ்வாய்க்கிழமை காலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:52 PM
பகிர்:

ஜம்மு: ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தின் ஜம்மு பகுதியில் செவ்வாய்க்கிழமை காலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டா் அளவுகோலில் 4.0 அலகுகளாக பதிவான இந்த நிலநடுக்கம், தோடா மாவட்டத்தின் பலாசா பகுதியில் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச்சேதமோ, பொருள்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை. கிஷ்த்வாா், ராம்பன், கதுவா மற்றும் உதம்பூா் மாவட்டங்களிலும் நிலஅதிா்வு உணரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

முன்னதாக, ஜம்மு-காஷ்மீரில் கடந்த 14-ஆம் தேதி முதல் தொடா்ந்து 3 நாள்கள் நிலநடுக்கம் ஏற்பட்டது. இப்போது மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதால், மக்கள் மேலும் பீதியடைந்துள்ளனா். 

முழு கட்டுரையைப் படிக்க →