முகப்பு
இந்தியா

பொய் மற்றும் வெறுப்புத் தகவல்கள் குறித்து புகார் அளித்தால் வெகுமதி: தில்லி அரசு

தில்லியில் பொய் மற்றும் வெறுப்புத் தகவல்களைப் பரப்புவோர் குறித்து புகார் அளித்தால் வெகுமதி வழங்கப்படும் என தில்லி பேரவையால் நியமிக்கப்பட்டுள்ள 9 பேர் கொண்டு குழு அறிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:03 PM
பகிர்:


தில்லியில் பொய் மற்றும் வெறுப்புத் தகவல்களைப் பரப்புவோர் குறித்து புகார் அளித்தால் வெகுமதி வழங்கப்படும் என தில்லி பேரவையால் நியமிக்கப்பட்டுள்ள 9 பேர் கொண்டு குழு அறிவித்துள்ளது.

தில்லியில் கடந்த வாரம் நிகழ்ந்த வன்முறையில் இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வன்முறைச் சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், தில்லி சட்டப்பேரவையால் 9 பேர் அடங்கிய அமைதி மற்றும் நல்லிணக்கக் குழு நியமிக்கப்பட்டது. இதற்கு ஆம் ஆத்மி சட்டப்பேரவை உறுப்பினர்கள் சௌரப் பரத்வாஜ், அடிஷி மற்றும் ராகவ் சத்தா ஆகியோர் தலைமை வகிக்கின்றனர்.

இந்தக் குழுவின் முதல் கூட்டம் இன்று (திங்கள்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சௌரப் பரத்வாஜ், "பொய்யான மற்றும் வெறுப்புத் தகவல்களைப் பரப்புபவர்களுக்கு எதிராக மக்கள் புகார் அளிக்கலாம். இதற்கென ஒரு தொலைபேசி எண்ணும், மின்னஞ்சலும் விரைவில் வெளியிடப்படும்.

மக்களின் புகார்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு, அந்தப் புகார்கள் சட்ட அமலாக்கத் துறை அமைப்புகளுக்கு அனுப்பப்படும். இந்தக் கூட்டத்தின்போது புகார் அளிப்பவர்களுக்கு ரூ. 10,000 வெகுமதி அளிக்கப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது. எனினும், வெகுமதிக்கான தொகை குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை" என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →