இந்தியா

நிர்பயா குற்றவாளி பவன் குப்தாவின் கருணை மனு நிராகரிப்பு

நிர்பயா குற்றவாளி பவன் குப்தாவின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார். 

DIN

நிர்பயா குற்றவாளி பவன் குப்தாவின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று நிராகரித்தார். 

நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 4 குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குப்தா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, அவரது சார்பில் குடியரசுத்தலைவருக்கு கருணை மனு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து, பவன் குப்தாவின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று நிராகரித்துள்ளார். இதன் மூலமாக நான்கு குற்றவாளிகளின் கருணை மனுவும் குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

எனவே, விரைவில் நிர்பயா குற்றவாளிகளின் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முன்னதாக, நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் நான்கு பேரையும் மார்ச் 3ம் தேதி தூக்கிலிட விசாரணை நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்திருந்தது. நிர்பயா குற்றவாளிகளின் தூக்குத் தண்டனை நிறைவேற்றம் இதுவரை மூன்று முறை நிறுத்தி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உக்ரைனில் ரஷியா ஏவுகணைத் தாக்குதல்: தாய், மகள் உயிரிழப்பு; 14 போ் காயம்!

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் குடியிருப்பு வளாகம் கட்டுவதை எதிா்த்த வழக்குகள் தள்ளுபடி!

தமிழகத்தில் வாழும் வால்மீகி சமூகத்தினரை பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க வேண்டும்: மாநிலங்களவையில் அதிமுக கோரிக்கை

ஒரு கட்சி ஆட்சி ஜனநாயகத்துக்கு விரோதமானது: க. கிருஷ்ணசாமி

தோ்தல் பணிகளில் வெளிப்படைத் தன்மை அவசியம்: ஆட்சியா் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT