இந்தியா

தில்லி வன்முறை: உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடைபெற வேண்டும் 

DIN

தில்லி வன்முறை குறித்து உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை நடைபெற வேண்டும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 

வட கிழக்கு தில்லியில் குடியுரிமைத் திருத்தச் சட்ட ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. இதில் ஏராளமான சொத்துக்கள் சேதமடைந்தன. இந்த வன்முறை தொடர்பாக தில்லி காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். 

இந்த வன்முறை சம்பவத்தில் 47 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து மால்டா மாவட்டத்தில் நேற்று நடந்த பேரணியில் பங்கேற்று பேசிய மம்தா, தில்லி வன்முறையின் போது நிகழ்ந்த உயிரிழப்புக்கு பாஜகதான் பொறுப்பு. 

மேற்கு வங்கத்தில் எந்த நிகழ்வு நடந்தாலும் பாஜக விசாரணை கோருகிறது. இப்போது, தில்லி வன்முறை தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் நீதி விசாரணையை நான் கோருகிறேன். தில்லி வன்முறையை மறைக்க கரோனா வைரஸ் விவகாரத்தை பாஜக கையில் எடுத்துள்ளது என்றார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

SCROLL FOR NEXT