முகப்பு
இந்தியா

ஜம்மு காஷ்மீரில் கரோனா வைரஸ் தீவிர அறிகுறியுடன் இரண்டு பேர் அனுமதி

ஜம்மு காஷ்மீரில் கரோனா வைரஸுக்கான தீவிர அறிகுறியுடன் இரண்டு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:06 PM
மாதிரிப் படம்
பகிர்:


ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் கரோனா வைரஸுக்கான தீவிர அறிகுறியுடன் இரண்டு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஜம்மு காஷ்மீரில் இரண்டு பேருக்கு கரோனா வைரஸ் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, மார்ச் 31ம் தேதி வரை அனைத்து விதமான பயோ மெட்ரிக் வருகைப் பதிவு முறைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், ஜம்மு காஷ்மீரில் தீவிர அறிகுறியுடன் மருத்துவமனையில் இரண்டு பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களுக்கு கரோனா வைரஸ் இருப்பதற்கு சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாகவும் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஜம்மு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிப்பிரிவில் இருவரும் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இவரது உடல்நிலையும் சீராக உள்ளது.

இருவரும் கரோனா பாதித்த இத்தாலி மற்றும் தென்கொரிய நாடுகளுக்குச் சென்று வந்துள்ளனர். இவர்கள் புதன்கிழமையன்று மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்ற நிலையில் ஒரு மணி நேரத்தில் அவர்களை மருத்துவக் குழுவினர் கண்டுபிடித்து மருத்துவமனையில் மீண்டும் அனுமதித்தனர்.

தயவு கூர்ந்து கரோனாவைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் போதிய ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் முதன்மைச் செயலாளர் (திட்டம்) ரோஹித் கன்சால் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ஜம்மு மற்றும் சம்பா மாவட்டங்களில் உள்ள அனைத்துத் தொடக்கப் பள்ளிகளுக்கும் மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

அதேபோல, ஜம்மு காஷ்மீரில் அனைத்து வகையான பயோ மெட்ரிக் வருகைப் பதிவு முறைகளையும் மார்ச் 31ம் தேதி வரை ரத்து செய்வதாகவும் அறிவித்தார். இந்த அறிவிப்புகள் அனைத்தும் உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.