முகப்பு
இந்தியா

உடல்நிலை குறித்த தகவல்களை மறைத்ததாக கரோனா நோயாளி மற்றும் குடும்பத்தார் மீது வழக்குப்பதிவு!

உடல்நிலை குறித்த தகவல்களை மறைத்ததாக ஆக்ராவைச் சேர்ந்த கரோனா நோயாளி மற்றும் அவரது குடும்பத்தார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On : 15 மார்ச், 2020 at 6:31 PM
கோப்புப்படம்
பகிர்:

ஆக்ரா: உடல்நிலை குறித்த தகவல்களை மறைத்ததாக ஆக்ராவைச் சேர்ந்த கரோனா நோயாளி மற்றும் அவரது குடும்பத்தார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா நகர் ரயில்வேயை காலனி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு சமீபத்தில்   பெங்களூருவைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப பொறியாளர் ஒருவருடன் திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதி தங்களது தேனிலவிற்காக இத்தாலி சென்றுள்ளனர். நாடு திரும்பிய பின்னர் அவரது கணவருக்கு நடந்த பரிசோதனையில் அவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதையடுத்து இந்தப்பெண்ணை வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

ஆனால் இந்தப் பெண் யாருக்கும் தகவல் சொல்லாமல் பெங்களூருவில் இருந்து வெளியேறி, ரயில் மூலமாக ஆக்ராவை வந்தடைந்துள்ளார். தகவல் அறிந்த சுகாரத்துறை அதிகாரிகள் அவரது வீட்டைச் சென்றைடைந்து தகவல் கேட்டபோது அவரது குடும்பத்தார் சரியான தகவல்களைத் தரவில்லை.

Advertisement

இதனால் உடல்நிலை குறித்த தகவல்களை மறைத்ததாக அந்தப் பெண் மற்றும் அவரது குடும்பத்தார் மீது ஆக்ரா சதார் பஸார் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.