இந்தியா

மேற்கு வங்கத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி

மேற்கு வங்கத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. 

IANS

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. 

கரோனா வைரஸ் நாடு முழுவதும் தீவிரமாகப் பரவத் தொடங்கியுள்ள சூழலில் அதைத் தடுக்கும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன. நாடு முழுவதும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

இந்த சூழலில் மேற்கு வங்க மாநிலத்தில் ஏற்கெனவே ஒருவர் பலியாகியுள்ள நிலையில், மேலும் ஒருவருக்குப் புதிதாக கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கிழக்கு பெருநகர பைபாஸுக்கு அருகிலுள்ள நயாபாத்தில் வசிக்கும் இவர் காய்ச்சல் இருமல் மற்றும் சுவாசக் கோளாறுகளால் கடந்த திங்கள்கிழமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டார். 

மேலும், இவரது ரத்த மாதிரிகளைச் சோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில் கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர் சர்வதேச பயணம் எதுவும் மேற்கொள்ளவில்லை என்றாலும், சமீபத்தில் மிட்னாபூரில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் பங்கேற்றுள்ளார். இவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கர்வமில்லாத மனிதர் நல்லகண்ணு!” நடிகர் எம்.எஸ். பாஸ்கர் மரியாதை!

கோடிங் டெவலப்பர்கள் பற்றி ஸ்ரீதர் வேம்பு கருத்து!

தஞ்சாவூர் மாவட்டத்துக்கு மார்ச் 2ல் உள்ளூர் விடுமுறை!

ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் வெள்ளி கிலோவுக்கு ரூ. 3,264 ஆக சரிவு!

கா்நாடக சுகாதாரத் துறையில் மருந்து பற்றாக்குறை: பாஜக விஜயேந்திரா கண்டனம்

SCROLL FOR NEXT