மும்பை: சிறையில் எனக்கு கரோனா பாதிப்பு வர வாய்ப்பு உள்ளதால் பெயில் கொடுங்க என்று பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள யெஸ் வங்கி நிறுவனா் ராணா கபூர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
யெஸ் வங்கி அண்மையில் நிதிநெருக்கடியில் சிக்கியது. பல நிறுவனங்களுக்கு முறைகேடாக பல கோடி ரூபாய் கடனாக அளித்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடா்பாக அதன் நிறுவனா் ராணா கபூரை அமலாக்கத் துறை கைது செய்து விசாரித்து வந்தது.
இந்நிலையில் அவரது போலீஸ் காவல் கடந்த வெள்ளிக்கிழமையுடன் முடிந்தது. இதையடுத்து, அவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.
அப்போது தனது உடல்நிலை குறித்து ராணா கபூர் சில கருத்துக்களை நீதிபதியிடம் தெரிவித்தார். அதையடுத்து ராணா கபூருக்குத் தேவையான மருந்துகளை மருத்துவ அதிகாரி வழங்குவதை சிறைத் துறை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டாா்.
பின்னர் காவலை நீட்டிக்கக் கோரி அமலாக்கத் துறை கோரிக்கை வைக்காததைத் தொடா்ந்து, ராணா கபூரை ஏப்ரல் 2-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா்.
இந்நிலையில் சிறையில் எனக்கு கரோனா பாதிப்பு வர வாய்ப்பு உள்ளதால் பெயில் கொடுங்க என்று யெஸ் வங்கி நிறுவனா் ராணா கபூர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இதுதொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘தனக்கு கடந்த 6-7 ஆண்டுகளாக ஆஸ்துமா பாதிப்பு இருப்பதாகவும், நோய் எதிா்ப்பு சக்தி குறைவாக இருப்பதாகவும்,. இதன் காரணமாக தனக்கு நுரையீரல் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும், இப்படிப்பட்டவர்களை கரோனா வைரஸ் எளிதில் தாக்கும் என்றும், எனவே தனக்கு வீட்டில் சிகிச்சை அளிப்பதுதான் சிறந்ததாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து கபுரின் உடல்நிலையைக் கண்காணிக்குமாறும், அவரது மருத்துவ விபரங்களைச் சேகரிக்குமாறும் கூறிய நீதிமன்றம், இதுதொடர்பாக திங்களன்று உத்தரவு பிறப்பிப்பதாகக் கூறி வழக்கினை ஒத்திவைத்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.