காஷ்மீரில் கரோனா பாதிப்பு 41ஆக உயர்வு
காஷ்மீரில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாகாஷ்மீரில் கரோனா பாதிப்பு 41ஆக உயர்வு
காஷ்மீரில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41ஆக உயர்ந்துள்ளது.
காஷ்மீரில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41ஆக உயர்ந்துள்ளது.
கரோனா வைரஸ் தாக்கம் தற்போது உலகை அச்சுறுத்தி வருகிறது. இதனால் இந்தியா முழுவதும் கடந்த 25ஆம் தேதி முதல் தொடர்ந்து 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் வெளியே நடமாட வேண்டாம் என்றும் அத்தாவசிய பொருட்கள் வாங்க மட்டும்
வெளியே வந்தால் போதும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஜம்முவில் மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை காஷ்மீர் அரசின் செய்தி தொடர்பாளர் ரோஹித் கன்சால் டிவிட்டரில் உறுதி செய்துள்ளார். இத்துடன் அங்கு கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41ஆக உயர்ந்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி இந்தியாவில் கரோனா வைரஸுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1071ஆக உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா பாதிப்புக்குள்ளான 29 பேர் பலியான நிலையில் 99 பேர் குணடைந்து வீடு திரும்பியுள்ளனர்.