முகப்பு
இந்தியா

வயநாட்டை பச்சை மண்டலத்தில் இருந்து மாற்றிய கோயம்பேடு காய்கறிச் சந்தை

கடந்த 32 நாட்களுக்கும் மேலாக கரோனா தொற்று பாதித்த ஒரு நபர் கூட கண்டறியப்படாத வயநாட்டை, பச்சை மண்டலத்தில் இருந்து மாற்றியுள்ளது கோயம்பேடு காய்கறிச் சந்தை.

Updated On : 7 மே, 2020 at 4:47 PM
பகிர்:


கோழிக்கோடு: கடந்த 32 நாட்களுக்கும் மேலாக கரோனா தொற்று பாதித்த ஒரு நபர் கூட கண்டறியப்படாத வயநாட்டை, பச்சை மண்டலத்தில் இருந்து மாற்றியுள்ளது கோயம்பேடு காய்கறிச் சந்தை.

சென்னையில் உள்ள கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வந்து சென்ற 52 வயதான வயநாடு டிரக் ஓட்டுநருக்கு மே 2-ம் தேதி கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே சமயம், அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 30 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். 

கோயம்பேடு காய்கறி சந்தையுடன் தொடர்புடைய 600 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், அந்த டிரக் ஓட்டுநரின் 82 வயது தாய், 49 வயது மனைவி மற்றும் துணை ஓட்டுநராக உடன் வந்த 21 வயது மகனுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement

இதன் மூலம், பச்சை மண்டலத்தில் இருந்த வயநாடு ஆரஞ்சு மண்டலத்துக்கு மாறியுள்ளது. புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்ட நால்வருக்குமே எந்த அறிகுறியும் இல்லாதது, வயநாடு மக்களுக்கு மேலும் அச்சத்தை அதிகரித்துள்ளது.

மேலும் வயநாட்டில் இருந்து கோயம்பேடு காய்கறி சந்தைக்குச் சென்று வந்த டிரக் ஓட்டுநர்களின் விவரங்களை ஆராய்ந்து வருவதாக மாவட்ட ஆட்சியர் அடீலா அப்துல்லா தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.