முகப்பு
இந்தியா

பொதுமக்களிடம் இருந்து ஏராளமான யோசனைகள் வந்துள்ளன: அரவிந்த் கேஜரிவால்

தில்லியில் ஊரடங்கு உத்தரவை தளர்த்துவது குறித்து பொதுமக்கள் மற்றும் நிபுணர்களிடம் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஆலோசனை கேட்டிருந்தார்.

Updated On : 14 மே, 2020 at 3:07 PM
பகிர்:


புது தில்லி: தில்லியில் ஊரடங்கு உத்தரவை தளர்த்துவது குறித்து பொதுமக்கள் மற்றும் நிபுணர்களிடம் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஆலோசனை கேட்டிருந்தார்.

இந்த நிலையில் பொதுமக்களிடம் இருந்து ஏராளமான பரிந்துரைகள் வந்திருப்பதாக அரவிந்த் கேஜரிவால் இன்று கூறினார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், தில்லியில் சந்தைகள் உள்ளிட்டவற்றை திறக்க உத்தரவிட வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை. மேலும், கடைகளை பாதிப் பாதியாகப் பிரித்து ஒருநாள் விட்டு ஒரு நாள் திறக்கும் வகையில் திட்டங்களை வகுக்கவும் யோசனை கூறியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் கொடுத்திருக்கும் யோசனை குறித்து இன்று மாலை 4 மணியளவில் மாநில பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் மற்றும் துணைநிலை ஆளுநருடன் ஆலோசனை நடத்த உள்ளேன். 

Advertisement

இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு தில்லியில் எந்த அளவுக்கு தளர்வு அறிவிக்கப்படலாம் என்பது குறித்து மத்திய அரசக்கு பரிந்துரை  அனுப்புவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.