முகப்பு
இந்தியா

ஒடிசா, ராஜஸ்தானில் கரோனா பாதிப்பு நிலவரம்

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்று பரவி மக்களை உலுக்கி வருகின்றது. இந்நிலையில், கரோனா நோய்த் தொற்றால் இன்று பாதிக்கப்பட்டோர் விவரத்தை ராஜஸ்தான்,

Updated On : 15 மே, 2020 at 11:05 AM
பகிர்:

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்று பரவி மக்களை உலுக்கி வருகின்றது. இந்நிலையில், கரோனா நோய்த் தொற்றால் இன்று பாதிக்கப்பட்டோர் விவரத்தை ராஜஸ்தான், ஒடிசா ஆகிய மாநிலங்களின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. 

ராஜஸ்தான்

ராஜஸ்தானில் மேலும் 55 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று பதிவாகியுள்ளன. அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு 4,589 ஆக உள்ளதாக மாநில சுகாதாரத் துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

Advertisement

இதில், 1,818 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 2,646 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். கரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 125 ஆக அதிகரித்துள்ளது. 

ஒடிசா

ஒடிசாவில் மேலும் 61 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு 672 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

இதில், 511 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதே நேரத்தில் 158 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். 3 பேர் பலியாகியுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.