திருமண நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேல் கூடக் கூடாது: மத்திய அரசு
திருமண நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேல் கூடக் கூடாது என்றும், கட்டாயம் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
திருமண நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேல் கூடக் கூடாது என்றும், கட்டாயம் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமல்படுத்தப்பட்ட 3-ஆம் கட்ட பொது முடக்கம் இன்று நள்ளிரவுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், 4-ஆம் கட்டமாக பொது முடக்கத்தை மே 31 வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இந்த பொது முடக்கக் காலத்தில் மக்கள் கடைப்பிடிக்கப்பட வேண்டியவற்றை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அறிவுறுத்தல்கள்:
- பொது இடங்கள் மற்றும் பணி இடங்களில் முகக் கவசம் கட்டாயம்
- பொது இடங்கள் மற்றும் பணி இடங்களில் எச்சில் துப்பினால் அபராதத்துடன் தகுந்த தண்டனை வழங்கப்படும்
- பொது இடங்களிலும், பயணங்களின்போதும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்
- திருமண நிகழ்ச்சிகளில் 50-க்கும் மேற்பட்ட நபர்கள் கூடக் கூடாது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்
- இறுதிச் சடங்குகள் மற்றும் இறுதி ஊர்வலங்களில் 20-க்கும் மேற்பட்ட நபர்கள் கூடக் கூடாது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்
- மது, பான் மசாலா, குட்கா உள்ளிட்டவற்றை பொது இடங்களில் உட்கொள்ள அனுமதி கிடையாது
- கடைகளில் 2 நபர்களுக்கிடையே 6 அடி இடைவெளி இருப்பதை உறுதி செய்ய வேண்டும், 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்கக் கூடாது.