கரோனா: இந்தியாவில் பாதித்தோரின் எண்ணிக்கை 96,169-ஆக உயர்வு
இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90,927-லிருந்து 96,169-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90,927-லிருந்து 96,169-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கரோனா நோய்த்தொற்று பரவலைத் தொடா்ந்து கடந்த மாா்ச் 24 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் பொது முடக்க அமல்படுத்தப்பட்டது. ஏப். 21 ஆம் தேதி இரண்டாவது முறையாக பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டது. மே 4 ஆம் தேதி மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்டு தற்போது மே 18 ஆம் தேதி முதல் நான்காம் முறையாகவும் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்தியாவில் கரோனாவால் கடந்த 24 மணிநேரத்தில் 5242 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இத்துடன் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90,927-லிருந்து 96,169-ஆக உயர்ந்துள்ளது. மேலும் கரோனாவுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 157 பேர் பலியாகியுள்ளனர்.
இதன்மூலம் ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 2,872-லிருந்து 3,029-ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 34,109-லிருந்து 36,824-ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.