இந்தியா

நாசிக் மாவட்டத்தில் மேலும் 23 பேருக்கு கரோனா தொற்று: பாதிப்பு 890 ஆனது

மகாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக் மாவட்டத்தில் புதிதாக 23 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில், அந்த மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 890 ஆக உயர்ந்துள்ளது. 

PTI


மகாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக் மாவட்டத்தில் புதிதாக 23 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில், அந்த மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 890 ஆக உயர்ந்துள்ளது. 

புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களில் மாலேகான் நகரத்தைச் சேர்ந்த 11 பேரும், நாசிக் நகரத்தைச் சேர்ந்த 8 பேரும் ஆவார். மேலும் நான்கு பேர் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர். 

இந்த புதிய வழக்குகள் மூலம், வடக்கு மகாராஷ்டிராவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 890 ஆக உயர்ந்துள்ளது என்று அந்த சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த வழக்குகளில் 684 மாலேகானில் இருந்தும், 59 நாசிக்கிலிருந்தும், 111 மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்தும் பதிவாகியுள்ளன. வெளிமாவட்டத்தைச் சேர்ந்த 36 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். 

இதுவரை, மாலேகானில் 654 - 504 வரை நோயிலிருந்து மீண்டுள்ளனர். 46 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இவர்களில் 43 பேர் மாலேகானில் இருந்து பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜக நிர்வாகி மர்மச் சாவு: கொலையா? காவல்துறை விசாரணை!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு

கைதி மலேசிய ரீமேக்: முதல் பார்வை போஸ்டர்!

ஆக்ஸ்ஃபோர்டில் பெரியார் படத்தை திறக்கவுள்ளேன்! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்! | MKStalin | DMK | TNCM

SCROLL FOR NEXT