முகப்பு
இந்தியா

கரோனாவின் கோரக் கரங்களின் பிடியில் இதுவரை சிக்காத லட்சத்தீவுகள்

இந்தியாவில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், நாட்டின் ஒரு பகுதியில் இன்னமும் கரோனாவின் சுவடே இல்லை என்றால் அது லட்சத்தீவுகள்தான்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:41 PM
பகிர்:

இந்தியாவில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், நாட்டின் ஒரு பகுதியில் இன்னமும் கரோனாவின் சுவடே இல்லை என்றால் அது லட்சத்தீவுகள்தான்.

சுமார் 36 சிறு சிறுத் தீவுகளை உள்ளடக்கிய லட்சத்தீவுகளில் சுமார் 64 ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள். கேரள கடற்கரையை ஒட்டியிருக்கும் இந்த யூனியன் பிரதேசத்தின் பெரும்பாலான தேவைகள் தென்னிந்திய மாநிலங்களில் இருந்தே பூர்த்தி செய்யப்படுகின்றன.

கடந்த திங்கள்கிழமை வரை, இந்தியாவிலேயே நாகாலாந்து மாநிலத்தில் மட்டுமே கரோனா தொற்று ஒன்று கூட இல்லாமல் இருந்த நிலையில், திங்கள்கிழமை ஒரே நாளில் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த மூன்று பேரும் சிறப்பு ரயில்கள் மூலம் சென்னையில் இருந்து நாகாலாந்து திரும்பியவர்கள்.

அதேபோல கரோனாவிடம் சிக்காத சிக்கிமாக இருந்த அந்த மாநிலத்திலும் கடந்த சனிக்கிழமை தான் முதல் முறையாக, தில்லியில் இருந்து திரும்பிய 25 வயது மாணவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.

இந்தியாவில் கரோனா அதிகம் பாதிக்காத மாநிலங்களாக இருப்பது பெரும்பாலும் வடகிழக்கு மாநிலங்கள்தான். சுமார் ஒரு மாத காலத்துக்கும் மேலாக அருணாச்சலப் பிரதேசம் கரோனா இல்லாத மாநிலமாக விளங்கியது. ஆனால் மே 18-ம் தேதி தில்லியில் இருந்து பேருந்து மூலம் வந்தவர்களில் ஒரு மாணவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.

ஏற்கனவே ஒரே ஒரு நோயாளி மட்டுமே கண்டறியப்பட்டு அவரும் குணமடைந்து பச்சை மாநிலமாக இருந்த நிலையில், ஒரு மாதத்துக்குப் பிறகு அருணாச்சலில் தற்போது ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இந்தியாவில் கடந்த 5 நாட்களாக தினந்தோறும் ஆறு ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
 

முழு கட்டுரையைப் படிக்க →