இந்தியா

மகாராஷ்டிரத்தில் சுமார் 50 சதவீத வெட்டுக்கிளிகள் அழிக்கப்பட்டன: அமைச்சர் தகவல்

DIN

மகாராஷ்டிரத்தில் சுமார் 50 சதவீத வெட்டுக்கிளிகள் அழிக்கப்பட்டதாக அம்மாநில விவசாயத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 

செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிர விவசாயத்துறை அமைச்சர் தாதா புஸ் கூறுகையில், 'மகாராஷ்டிரத்தில் வேளாண் துறையால் சுமார் 50 சதவீத வெட்டுக்கிளிகள் அழிக்கப்பட்டன. பூச்சிக்கொல்லிகளை தெளிப்பதற்காக தீயணைப்புப் படையின் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாயிகளுக்கு ரசாயனங்கள்/ பூச்சிக்கொல்லிகளை இலவசமாக வழங்குகிறோம். வெட்டுக்கிளிகளின் தாக்குதலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்' என்று தெரிவித்தார். 

இதற்கிடையில், மகாராஷ்டிரத்தின் பண்டாரா உள்ளிட்ட பகுதிகளில் வெட்டுக்கிளித் தாக்குதலை எதிர்க்க கிருமிநாசினியை தெளித்தும் டிரம்ஸ்களை அடித்தும் விரட்டும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT